Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபி துரைசாமியை அடுத்து பாஜக செல்லும் மேலும் ஒரு பிரபலம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 27 மே 2020 (20:49 IST)
விபி துரைசாமியை அடுத்து பாஜக செல்லும் மேலும் ஒரு பிரபலம்
சமீபத்தில் விபி துரைசாமி அவர்கள் திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார். திமுகவில் இருப்பவர்கள் பாஜக செல்வது என்பது மிகவும் அரிதாகவே நடந்த நிலையில் இந்த நிகழ்வு திமுக தலைமையை அதிர்ச்சி ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக விலிருந்து நீக்கப்பட்ட கேபி ராமலிங்கம் அவர்களும் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அவர் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எல்.முருகன் அவர்களிடம் கேபி ராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் ஒரு பக்கம் அதிமுக பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து நல்ல பெயர் வாங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் திமுக தனது முக்கிய தலைவர்களை இழந்து கொண்டிருப்பது திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments