Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கோயம்பேடு க்ளஸ்டர் ’- அ முதல் ஃ வரை முழு விவரம்!!

Webdunia
சனி, 9 மே 2020 (12:20 IST)
கோயம்பேடு மூலம் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எப்படி பரவி உள்ளது என்பதன் தொகுப்பு இதோ... 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சுமார் 3000 க்கும் மேல் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த வாரம் வரைக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கக் காரணம் கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக மாறியதுதான். அங்கு பணிபுரிந்த பல தொழிலாளர்களுக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களைப் பரிசோதிக்க மளமளவென எண்ணிக்கை உயர ஆரம்பித்தது.
இந்நிலையில் அந்த மார்க்கெட்டோடு மட்டும் தொடர்புடையவர்களில் 1589 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரம் பின்வருமாறு... 
 
கோயம்பேடு சந்தையிலிருந்து உருவான நோய்ப்பரவல் தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு பரவி உள்ளது. 
 
சென்னை, கடலூர், அரியலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 
விழுப்புரத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும் 176 பேர் கோயம்பேடு பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
பெரம்பலூரில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கோயம்பேடு வந்து சென்றதால் தொற்று ஏற்பட்டுள்ளது.
 
திருவள்ளூரில் 180 பேரும், காஞ்சிபுரத்தில் 44 பேரும், செங்கல்பட்டில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
தஞ்சாவூரில் 5 பேரும், நீலகிரியில் 4 பேரும், புதுக்கோட்டையில் 3 பேரும், தர்மபுரியில் 3 பேரும், திருப்பூரில் 2 பேரும் என பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments