கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புதிய சட்டசபை கட்டிடம்? 40 மாடியில் ஐடி அலுவலகம்?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (12:52 IST)
கிளாம்பாக்கத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்துதான் இனி தென் மாவட்ட பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது சென்று கொண்டிருந்தாலும் இன்னும் ஒரு வருடத்தில் அதுவும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. 

ALSO READ: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்.. பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!
 
அதன் பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் புதிய சட்டசபை கட்டிடமாக மாறலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த இடத்தில் 40 மாடி கொண்ட  சர்வதேச ஐடி நிறுவனம் ஒன்று வர இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பாலங்கள் கட்டி தற்போது நல்ல நிலையில் இருப்பதால் இங்கே புதிய சட்டசபை கட்டிடம் அல்லது சர்வதேச ஐடி நிறுவனத்தின் கட்டிடம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments