Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கட்டுமான பணிகள் தொடக்கம்.. செயல்படுவது எப்போது?

Mahendran
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (10:06 IST)
கிளாம்பாக்கத்தில் விரைவில் ரயில் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கி விட்டதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ரயில் நிலையம் பயணிகளுக்கு செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு தற்போது ரயில் வசதி இல்லை. ரயிலில் செல்ல வேண்டும் என்றால் வண்டலூரில் இறங்கி அங்கிருந்து பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க திட்டமிட்ட நிலையில் அதற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது என்பதும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ரூ.20 கோடி நிதியுடன் இந்த ரயில் நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ரயில் நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கி விட்டதாகவும் இந்த ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் வந்து செல்லும் வகையில் மூன்று நடை மேடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. கட்டுமான பணிகள் ஜனவரிக்குள் முடிந்துவிடும் என்றும் மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments