Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதிப்படையில சத்யராஜ் தடவுன மாதிரியா? கஸ்தூரியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (07:14 IST)
நடிகை கஸ்தூரி நேற்று நடைபெற்று சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா போட்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்து ஒரு டுவீட்டுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி கொடுத்த 109 என்ற இலக்கை அடைய சென்னை அணி நிதானமாக விளையாடியதூ. ஒரு கட்டத்தில் 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலை குறித்து நடிகை கஸ்தூரி, 'என்னய்யா இது  . பல்லாண்டு வாழ்க படத்துல  வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.' என்று ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இந்த டுவிட்டை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்படைந்து கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
அமைதிப்படை படத்தில் சத்யராஜ், கஸ்தூரிக்கு அல்வா கொடுத்த காட்சியை பெரும்பாலான டுவிட்டர் பயனாளிகள் குறிப்பிட்டு 'எப்படி அமைதி படை படத்துல சத்யராஜ் உன்ன தடவின போல தானே??? என்று பதிவு செய்து கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்து அபாரமாக எடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு பிட்ச்சில் விக்கெட்டை இழக்காமல் இலக்கை எட்டுவதே ஒரு அணியின் நோக்கமாக இருந்த நிலையில் காமெடி என்ற பெயரில் எம்ஜிஆரையும் இழிவுபடுத்தி வீரர்களையும் கலாய்த்த கஸ்தூரியின் அநாகரீகமான பதிவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments