Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியை - மகன் இருவருக்கும் கொரோனா: கரூரில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (17:06 IST)
கரூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் அதே பள்ளியில் படித்து வரும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் என்ற பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஆதி லோகநாயகி. இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சல் இருந்துள்ளது. இதனை அடுத்து அவர் காந்திகிராமம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து அவரது மகன் ஹரி பிரசாத் என்பவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் கரூர் அரசு பள்ளி ஆசிரியை மற்றும் அவரது மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசு பள்ளி இயங்குமா என்ற ஐயம் ஏற்பட்டது 
 
ஆனால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் தற்போது அரசு பள்ளி விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆசிரியை லோகநாயகி மற்றும் அவரது மகன் ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments