Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனு கொடுக்க வந்த மூதாட்டியை அலட்சியம் செய்த கரூர் கலெக்டர்

மனு கொடுக்க வந்த மூதாட்டியை அலட்சியம் செய்த கரூர் கலெக்டர்
, திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (16:23 IST)
கரூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வயதான பெண்மணியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிய மாவட்ட நிர்வாகத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் மனு கொடுக்க வந்த, கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, கஸ்தூரி குரும்பம்பட்டியை சார்ந்த வயதான பெண்மணி சந்திரா, தனக்கு சொந்தமான வீடு மற்றும் தோட்டத்திற்கு செல்லும் வழியில், அதே பகுதியை சார்ந்த 10 பேர் நிலத்தை அபகரிக்கும் பொருட்டு, ஜே.சி.பி இயந்திரம் வைத்து இரவு நேரங்களில் வீட்டிற்கும், தோட்டத்திற்கும் செல்ல விடாமல் குழி பறித்து நிலத்தை கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுக்க வந்தார். 
 
என் தோட்டத்தில் உள்ள மரங்களை இரவோடு, இரவாக ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து வந்து கொண்டு வருகின்றனர். இதை தட்டிக் கேட்ட எனக்கு என்று யாருமில்லை என்று கூறி அழுதார். 
 
மேலும் கூலிப்படையை வைத்து என்னை கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டிய அவரது மனுவை பார்க்காமல் கூட அப்பெண்மணி அழுததால் வெளியே செல்லும் படி காவல்துறையினருக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர், பெண் ஆட்சியில் பெண் என்றும் பார்க்காமல், வெளியே தூக்கி போடுமாறும் உத்திரவிட்டார்.
 
இந்த செயலால் மற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களும் அச்சத்திற்கு உள்ளாகினர். மேலும் இந்த சம்பவத்தால் பாதிப்படைந்த இந்த வயதான பெண்மணி கூறுகையில் “நானும் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேல், சுமார் 4 வருடங்களாக மனு கொடுத்து வருகின்றேன். 

webdunia

 

 
ஆனால் எனது மனு மீது உரிய விசாரணை எடுக்க தாமதம் செய்ததோடு, தற்போது என்னையே வெளியேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டுள்ளார். இதை மாநில முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் அளிக்க உள்ளேன். ஒரு மேல் அதிகாரியே இந்த மாதிரி நடந்தால் இவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் என்னை என்ன செய்வார்கள்?” என்று கேள்வி எழுப்பியதோடு, என் பிரச்சினையை தமிழக முதல்வர் அம்மா தான் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று வெளியே புழம்பியபடி சென்றார்,
 
இந்த வயதான பெண்மணியிடம் கலெக்டரும் போலீசாரும் நடந்து கொண்ட விதத்திற்கு, சமூக நல ஆர்வலர்களும், பொதுநல ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் பழிவாங்குவேன் ; ஆவியாக வந்த சுவாதி : திகிலூட்டும் ஆவி மீடியேட்டர்