Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்குலத்தோர் சமூகத்தை இழிவுபடுத்துவதா? முக ஸ்டாலினுக்கு கருணாஸ் கண்டனம்

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:24 IST)
சமீபத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் திருநீறு பூச மறுத்து அதனை கீழே கொட்டியது ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திமுக கட்சியின் தாய் கழகமான திராவிட கட்சியின் தலைவரான பெரியாரால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்க தேவர். நாத்திகவாதியான பெரியார் 1968ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில், அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதையாக செலுத்தப்பட்டதை அவமதிப்பது நாகரீகமாக இருக்காது, மனித பண்பாக இருக்காது என ஆணித்தரமாக சொன்னதாக சுட்டிக்காட்டியவர். 
 
அதிலிருந்து வந்த திமுக கட்சியின் தலைவரான ஸ்டாலின் ஒன்று நாத்தீகராக அல்லது ஆத்தீகராக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அணிவிக்கும் புனிதமான குல்லாவை ஏற்கும் நிலையில், திருநீறை உதாசீனப்படுத்தியது முத்துராமலிங்க தேவரை இழிவுப்படுத்தி விட்டதாகவே தெரிகிறது
 
இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் முக்குலத்தோர் சார்பில் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சடங்கு உள்ளதை ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும், பெருத்த சமூகத்தின் உணர்வுகளை ஸ்டாலின் புரிந்துக் கொள்ள வேண்டும்’ என்று கருணாஸ் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments