கருணாநிதி சிலை திறப்பு விழா! இதுவரை அறிவாலயம் வந்தவர்கள் யார் யார்?

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (16:46 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள சற்றுமுன் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்துவிட்டனர். சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்பி அவர்களை வரவேற்றார். சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின் அறிவாலயம் வரவுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க கி.வீரமணி, வைகோ, ரஜினிகாந்த், திருமாவளவன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டி.ராஜா, முத்தரசன் ஆகியோர் வந்துவிட்டனர்.

சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் இந்த விழா நடைபெறும் இடத்தில் 300 பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்ணா அறிவாலயம் முழுவதும் கடந்த சில மணி நேரமாக போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments