விருப்பமனு கொடுத்தார் கார்த்திக் சிதம்பரம்.. சிவகெங்கையில் மீண்டும் போட்டியா?

Siva
புதன், 20 மார்ச் 2024 (09:12 IST)
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த பத்து தொகுதிகளில் ஒன்று சிவகங்கை என்பதும் இந்த தொகுதியில் மீண்டும் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்த கார்த்திக் சிதம்பரம் அவர்கள் சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடக்கூடாது என காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை மற்றும் டெல்லி மேலிட தலைமையிடம் புகார் மனு அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட கார்த்திக் சிதம்பரம் விருப்பமனு கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாசியப்பன், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கேஆர் ராமசாமி ஆகியோர்களும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட இன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்பம் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை மூன்று பேர் சிவகங்கை தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளதை அடுத்து யாருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ALSO READ: தேர்தலில் போட்டியில்லை என்றாலும் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு: திருமாவளவன் முடிவு..!

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

பாராளுமன்ற கூட்டத்தொடரின் நடுவே ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்: வெளிநாட்டு நாயகன் என பாஜக விமர்சனம்..!

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments