Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னதை விட அதிகமாக திறந்தவிட்ட கர்நாடகா?! – காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (09:47 IST)
தமிழகத்தின் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில் நீர்வரத்து அளவு அதிகரித்துள்ளது.



தமிழக விவசாய பயன்பாடுகளுக்காக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வந்த நிலையில், தண்ணீர் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவில் போராட்டங்களும் நடைபெற்றன.

இதுகுறித்து நடந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்தில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று வரை கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 4,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 6,300 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இது விவசாய தேவைகளை நிறைவேற்றும் என்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments