Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு வயசாயிடுச்சு, ஸ்டாலின் என்ன இளைஞரா? வெளுத்து வாங்கிய கராத்தே தியாகராஜன்

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (22:11 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோதே இன்றைய அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவர் பேசியது குறித்து தான் விவாதம் இருக்கும் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரஜினி குறித்த விவாதம் இன்று நடைபெற்று வந்த போது எழுத்தாளர் மதிமாறன் பேசியபோது, ‘ரஜினிக்கு வயதாகிவிட்டது அதனால் ஒரு சப்போர்ட்டாக கமல்ஹாசனை வைத்து கொள்வதாகவும், இதனால் தான் கமல் ரஜினி இணைப்பு நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்
 
உடனே அருகில் உட்கார்ந்திருந்த ரஜினி ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் அவரை பிடிபிடிவென பிடித்து விட்டார். ரஜினிக்கு வயதாகிவிட்டது என்றால் ஸ்டாலின் என்ன இளைஞரா? தளபதி என்று கூறுகிறீர்களே,  ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் ஓட்டப் போட்டி வைத்து பார்க்கலாமா? ரஜினியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா? ரஜினி இன்றும் உடலளவில் ஃபிட்டாக இருக்கிறார். ஆனால் ஸ்டாலின் எப்படி நடந்து செல்வார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று பட படவென பொரிந்து தள்ளினார் 
 
இதனால் இந்த நிகழ்ச்சியின் நெறியாளர்கள் திணறிப் போய் விட்டார். கராத்தே தியாகராஜன் யாரையும் பேச விடாமல் தொடர்ச்சியாக அவர் ரஜினியை குறை சொன்ன மதிமாறனை விமர்சனம் செய்து கொண்டே பேசினார். ஒரு கட்டத்தில் ’ஆமாம் நான் ஸ்டாலினுக்கு எதிராக தான் பேசுகிறேன், அப்படியே வைத்துக்கொள்’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments