Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கஞ்சா கருப்பு? - கசிந்த தகவல்கள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (13:22 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் கஞ்சா கருப்பு மீண்டும் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் உலா வருகிறது.


 

 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, கஞ்சா கருப்பு வெளியேறுவதாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கமல் அறிவித்தார். உடனே எழுந்த கஞ்சா கருப்பு மற்ற போட்டியாளர்களிடம் தான் விடைபெறுவதாக கூறி ஒவ்வொருவராக கட்டி தழுவினார். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு ஓவியாவுடன் குத்தாட்டம் போட்டுவிட்டு கிளம்பினார் . 
 
அந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாலும், அவர் வீடு திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அவர் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சி வழங்கியுள்ள அறையிலேயே இருப்பார் எனவும் செய்தி வெளியானது. ஒரு பிரபல வார இதழ் நிருபர் தொலைப்பேசியில் பேசியபோது, கஞ்சா கருப்பே இதை உறுதி செய்திருந்தார்.
 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் மீண்டும் பங்கு கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், வாரத்திற்கு ஒருவரைத்தான்  வெளியேற்ற முடியும். ஏற்கனவே பரணியை அனுப்பி விட்டார்கள். தற்போதும் கஞ்சா கருப்பும் போய்விட்டால் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்.  அவருக்கு பதிலாக மற்றொருவரையும் அழைத்து வர முடியாது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருப்பவர்களில், 11 பேருக்கு கஞ்சா கருப்புவை பிடித்திருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கு பெற கஞ்சா கருப்பு ஆர்வமாகவே இருக்கிறார். எனவே, விரைவில் அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments