Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறுத்திக் கொள்ளுங்கள் - ராதாரவிக்கு கனிமொழி எச்சரிக்கை

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (08:58 IST)
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, நடிகரும் அதிமுக பிரச்சார பேச்சாளருமான ராதாரவி, மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


 

 
ராதாரவி எப்போது சர்ச்சையான பேச்சுகளுக்கு பெயர் போனவர். சில நாட்களுக்கு முன் அவர், ஒரு அரசியல் மேடையில் பேசிய போது, வைகோவையும், ராமதாஸையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டுப் பேசினார். அதைக் கேட்டு  மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.  
 
ஆனால், அவரின் இந்த பேச்சிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மனம் புண்படும் படி அவர் பேசியுள்ளதாகவும், மிகவும் அருவெறுப்பு, அநாகரீகம், மனித தன்மையற்றச் செயல் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி. “ ராதாரவி அவர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள் மனத்தடைகளை உடைத்தவர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ராதாரவி சமீபத்தில்தான் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments