Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது: கனிமொழி

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (13:18 IST)
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மிக அதிகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீர் திடீரென ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் பெரும் குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது 
 
குறிப்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டதும், அதற்கான காரணத்தை அரசு தெரிவிக்காமல் இருப்பதும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த நிலையில் திடீரென சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஜெயந்தி அவர்கள் மருத்துவ விடுப்பில் சென்று இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான  சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி அவர்கள் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை.  கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments