Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால்.. மிரட்டல் வருகிறது: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:14 IST)
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் மிரட்டல் வருகிறது என திமுக எம்பி கனிமொழியை குற்றம் சாட்டி உள்ளார். 
 
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பாராளுமன்றம் என்பது கேள்வி கேட்க கூடாத பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்கக்கூடிய ஒரு இடமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் கேள்விகளை முன் வைத்தால் கேள்வி கேட்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள் என்றும் ஒரு அமைச்சர் இடம் நீங்கள் மதுரை எய்ம்ஸ் பற்றி கேள்வி கேட்டால் நம்மை மிரட்டுகிறார் என்றும் தெரிவித்தார். 
 
கயிறு கழுத்தை நெரிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய அமைச்சர் இருக்கிறார் என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் என்னவாக இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசியல் கட்சிகள் பிரதமர் இடம் கேள்விகளை முன் வைக்கும் போது அவர் நமக்கு தரும் ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான் என்றும் எந்த கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments