Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி திணிப்பை திராவிட முன்னேற்ற கழகம் ஒரு போதும் ஏற்காது: கனிமொழி ஆவேசம்

Arun Prasath
சனி, 14 செப்டம்பர் 2019 (17:41 IST)
ஹிந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழி தான் என கூறிய நிலையில்  தூத்துக்குடி எம்.பி.கனிமொழி அதனை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டை அடையாளப்படுத்தும் மொழி ஹிந்தி தான் எனவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியை போலவே ஹிந்தியையும் பயில வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்த பல அரசியல் தலைவர்கள், பாஜக ஹிந்தி யை நுழைக்க பார்க்கிறது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து எம்.பி.கனிமொழி, ஒரு மதம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்று ஒற்றை பரிணாமத்திற்குள் கொண்டு வரும் எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறாது என கூறினார். மேலும் இந்தி மொழி திணிப்பை திராவிட முன்னேற்ற கழகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments