Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது: கனிமொழி எம்.பி

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (16:12 IST)
ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது, இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்பி ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது என சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றும், பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்,  இதன் பிண்ணனி குறித்து விசாரிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றும்  நிச்சயமாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி பேட்டி அளித்துள்ளார்.
 
 இந்த நிலையில் ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய நபரிடம் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் பின்னணியில் வேறு யாரும் இந்த சம்பவத்தில் இருக்கிறார்களா என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. கனிமொழி எம்பி கூறியது போல இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments