Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷாவுக்கு பதில் வெங்கையா நாயுடு: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2015 (23:43 IST)
விருதுநகரில் நடைபெற உள்ள கர்மவீரர் காமராஜர் பிறந்த தின விழாவிற்கு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
நாட்டுக்காக உழைத்த தேச தலைவர்களை பாஜக தொடர்ந்து போற்றி மரியாதை செய்து வருகிறது. அந்த வகையில், கல்விக் கண் திறந்த காமராஜரின், 113ஆவது பிறந்த தின விழா, ஜூலை 15ஆம் தேதி, விருதுநகர் மற்றும் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால், அன்றைய தினம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதால், அவர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
அமித் ஷாவுக்கு பதிலாக, மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கு கொண்டு சிறப்பிக்க உள்ளார் என்றார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments