Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி பத்தி ஏற்கனவே தெரியும்; ரெஸ்ட் அவருக்கு.. ரெக்கமண்ட் எனக்கு! – கூட்டணி குறித்து கமல்ஹாசன்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (13:31 IST)
தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி அமைந்து விட்டதாகவும் விரும்புபவர்கள் இணையலாம் என்றும் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் மாவட்ட நிர்வாகிகளோடு கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.

அதில் அவர் “மக்கள் நீதி மய்யம் கழகங்களுடன் கூட்டணி அமைக்காது என்றும், மூன்றாவது கூட்டணி அமைய காலம் வந்து விட்டதாகவும் கூறி வந்தேன். தற்போது மூன்றாவது கூட்டணி அமைந்துள்ளது. அனைத்து கட்சியிலும் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லவர்கள் உள்ளீர்கள். நல்லவர்களுடன் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ள கமல்ஹாசன் ”ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது அறிக்கை வெளியாகும் முன்னரே எனக்கு தெரியும். நான் அவருடன் பேசி கொண்டுதான் இருக்கிறேன். அவருக்கு அரசியலை விட இப்போது உடல்நலம் மிக முக்கியம். சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக அவர் ஆதரவை கேட்போம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments