Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்களுக்கு அவ்ளோ தொகுதி.. எங்களுக்கு இவ்ளோதானா? – மய்யம் கூட்டணியிலிருந்து விலகிய கட்சி!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (10:51 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்த கட்சி தொகுதி பங்கீட்டு பிரச்சினையால் வெளியேறியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகல் ஏறத்தாழ கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடை உறுதி செய்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யமும் தனது கூட்டணி கட்சிகளாக சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வழியாக கட்சியாக பரிணமித்த தமிழ்நாடு இளைஞர் கட்சியும் மநீமவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை காண இருந்தது. இந்த கட்சிக்காக மநீம 4 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் மற்ற கட்சிகளுக்கு இரண்டு இலக்கங்களில் தொகுதி ஒதுக்கிவிட்டு தங்களுக்கு 4 தொகுதிகள் தருவதாக இளைஞர் கட்சியினர் குறைபட்டு கொண்டுள்ளார்களாம். இதனால் அந்த கட்சி மநீம கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments