Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (12:38 IST)
நடிகர் கமல்ஹாசன் வருகிற பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது மையம் விசில் செயலியை அறிமுகம் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் அதனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவித்தார்.  
 
மேலும், மதுரையில் பிப்ரவரி 24ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்போது அதை கமல்ஹாசன் மறுத்தார். அதைத் தொடர்ந்து, தனது இல்லத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். 21ம் தேதி ராமேஸ்வரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் தொடர்ந்து சில நாட்கள் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பார் எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 21ம் தேதி மாலை மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என கமல்ஹாசன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில் கலந்து கொள்ள தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலிருந்தும் அவரது ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பின் மூலம் அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிக, நாம் தமிழர்கள் மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்