Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக ஸ்டாலினை வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் டுவீட்

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (09:27 IST)
முக ஸ்டாலினை வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் டுவீட்
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் கூட்டணி கட்சி தலைவர்களும் தொடர்ச்சியாக இன்று காலை முதல் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன் என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
இந்த டுவிட்டிற்கு லைக்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments