Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் கமல்!

ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் கமல்!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (14:42 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவரது மரணத்துக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 
 
வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கமல் ஜெயலலிதாவுக்கு டுவிட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்தார். அதில், சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியிருந்தார். இவர் இரங்கல் தெரிவித்த இந்த விதமும், வார்த்தையும் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
ஒரு முதல்வராக இருந்து மரணமடைந்தவருக்கு இரங்கல் கூறும் விதமா இது என பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். கமலுக்கு எதிராகவும், அந்த டுவிட்டுக்கு விளக்கம் கொடுத்து அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments