Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது கட்சி ஆசியாவில் மய்யத்தை முன்னெடுக்கும்: கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (21:22 IST)
அதிமுக, திமுக என எந்த கூட்டணியிலும் இல்லாமல் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக கமல் அறிவித்துள்ளார். உண்மையிலேயே போட்டியிடுவாரா? அல்லது கடைசி நேரத்தில் போட்டியிடாமல் பின்வாங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
40 தொகுதிகளில் குறைந்தது 10 அல்லது 15 தொகுதிகளில் மய்யம் கட்சி வெல்ல வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசியல் விமர்சகர்களோ கமல் தவிர மற்ற 39 வேட்பாளர்களும் வரும் தேர்தலில் டெபாசிட் கூட பெற வாய்ப்பில்லை என்றும் இந்த தேர்தல் மூலம் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அவருடைய கட்சியின் ஓட்டு சதவிகிதத்தை தெரிந்து கொள்ளவே அவர் போட்டியிடுவதாகவும் கூறி வருகின்றனர்,.
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், 'அபிநந்தன் நாடு திரும்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாகவும், அண்டை நாட்டிற்கு நன்றி எனவும் கூறினார். மேலும் கலை வியாபாரம் ஆகிவிட்ட பிறகு அது வாழும் ஆனால் வளராது என்றும், மய்யம் என்பது சங்கரரின் அத்வைதமும் வள்ளுவரின் நடுநிலைமையும்தான் எனவும் ஆசியாவில் மய்யத்தை முன்னெடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments