Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து பயணம் தொடக்கம்: கமல் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (06:09 IST)
நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு மக்களை நேரடியாக சந்திக்கும் அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான இராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறிய கமல், தற்போது அங்குள்ள முன்னாள் ஜனாதிபதியும் மக்கள் விருப்பத்திற்கு உரியவருமான அப்துல்கலாம் அவர்களின் இல்லத்தில் இருந்து அவரது குடும்பத்தினர்களின் ஆசியை பெற்று தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கனவுகளை கொண்டவர்களில் நானும் ஒருவன் என்று அடிக்கடி கூறி வரும் கமல், கனவு காணுங்கள் என்று கூறிய அப்துல்கலாம் அவர்கள் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவது பொருத்தமான ஒன்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்