Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் கமல் கட்சி உண்டா? இல்லையா? அமைச்சர் ஐ பெரியசாமி சொன்ன தகவல்..!

Siva
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (15:54 IST)
திமுக கூட்டணியில் கமல் கட்சி சேருமா? சேராதா? என்பதை தலைவர் தான் முடிவு செய்வார் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

 திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டன. குறிப்பாக காங்கிரஸ், மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த முதல்கட்ட பேச்சு வார்த்தையை முடித்து விட்டது என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி என்பதை வெளிநாடு சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் நாடு திரும்பியதும் முடிவு செய்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் கமல் சேர்வார் என்று கூறப்பட்ட நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை கூட இன்னும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கமல் கட்சி திமுக கூட்டணியில் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஐ பெரியசாமி முதல்வர் சென்னை திரும்பியதும் தான் அது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments