Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி.. ஜல்லிகட்டு தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்..!

ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி.. ஜல்லிகட்டு தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்..!
, வியாழன், 18 மே 2023 (18:17 IST)
ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் வரவேற்று உள்ளனர். இந்த நிலையில் உலகநாயகன் கமலஹாசன் இந்த தீர்ப்பு குறித்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
 
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.
 
இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு  தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது. 
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி! 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருதுநகரில் பட்டாசுத் தொழிற்சாலை விபத்து: உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..!