Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? - காந்திக்கு கமல் வாழ்த்து

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (16:49 IST)
தேசத்தந்தை என்றழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் இறந்த தினத்தை நினைவுப்படுத்தும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.


 

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா?’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை கீழே:

போதியின் நிழலில் ஏற்றிய விளக்கு
ஆத்திக வெயிலில் வியர்த்துக் கருத்தது

தச்சன் ஒருவன் அறிவைச் சீவி
தானே அறைபடச் சிலுவை செய்தனன்

ஜாரின் கோலிற் செம்மை இலையெனச்
சினந்து சிவந்து குடியொன்றுயர்ந்தது

யூதப் பெருமான் அணுவை விண்டதில்
ஆயுதம் கண்டனர் அமெரிக்க சித்தர்

ஒற்றைக் கழியோன் அஹிம்சையில் பெற்றது
உற்றது இன்று ஹிம்சா புரியாய்

அன்பன்
- கமல்ஹாசன்

 இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments