Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி பாணியில் நிர்வாகிகளை நீக்கிய கமல்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (22:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் அவரது ரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் அவ்வப்போது ஒருசில நிர்வாகிகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை மீறியதால் நீக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி பாணியில் கமல் கட்சியிலும் மூன்று நிர்வாகிகள் இன்று நீக்கப்பட்டுள்ளதாக அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொண்டதாக இமாம் ஹாசன், சாகுல் அமீது மற்றும் மனோகரன் ஆகிய மூவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இந்த மூவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும், நீக்கப்பட்ட மூவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருப்பவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments