Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையிலும் தொடரும் கமல்-சரத்குமார் கூட்டணி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (10:53 IST)
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கூட்டணிகளை தவிர மேலும் மூன்று கூட்டணி உருவாகி இருப்பதால் மொத்தம் 5 முனை போட்டி உருவாகியுள்ளது 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது கூட்டணியும், சீமான் கட்சி 4வது கூட்டணியும் பாமக மற்றும் தேமுதிக இணைந்து ஐந்தாவது கூட்டணியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணியாக விளங்கிவரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சரத்குமாரின் கட்சி மற்றும் ஐஜேகே கட்சியும் இணைந்து உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இதே கூட்டணி புதுவையிலும் தொடர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் சரத்குமார் மற்றும் ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments