விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (13:22 IST)
விஜய் நடித்த லியோ படத்துக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதித்துள்ள தமிழ்நாடு அரசு, விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
 
 
கோவில்பட்டியில்  திருப்பூர் குமரனின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘விஜய்யை பார்த்து திராவிட முன்னேற்ற கழகம் பயப்படுகிறது என்றும், சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளை அரசு பார்க்க கூடாது என்றும்,  கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சம் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்தோம்’ என்றும் தெரிவித்தார்.
 
ஆனால்  கடந்த சில மாதஙக்ளாக ஒருசில  படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல என்றும்,   இதற்குக் காரணம். ரெட் ஜெயண்ட் என்ற தனி ஆதிக்கம் தான்.” என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments