Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு?

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (12:05 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருக்கிறது.  கோடை விடுமுறைக்கு பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து உயர் நீதிமன்றம் செயல்பட துவங்கியுள்ளது. எனவே, ஓரிரு நாளில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக இன்று செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை திமுக, தினகரன் தரப்பு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆகியோர் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். 
 
இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின் அதிமுக அரசு கவிழ்ந்து விடும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments