அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (10:53 IST)
அமைச்சர் பொன்முடி குறித்த செம்மண் குவாரி வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில்  செம்மண் எடுத்து முறையீடு செய்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி ஆகியோர் ஆஜராகவில்லை என்றாலும் நான்கு பேர் ஆஜரானதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதலாக சாட்சியை சேர்த்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு விசாரணைக்காக இவ்வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
அன்றைய தினம் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments