”எப்படி இருந்த திமுக, இப்படி ஆகிடுச்சே.. ”பங்கமாய் கலாய்க்கும் ஜெயகுமார்

Arun Prasath
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (10:50 IST)
திமுக ஒரு குழப்பமான கட்சி எனவும், ஸ்டாலின் ஒரு குழப்பவாதி எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதி மறுவரையறை செய்யப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் 9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பயன்படுத்தப்படவில்லை என மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது திமுக.

இதனை குறித்து அதிமுகவினர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை கண்டு அச்சம் கொள்கிறார் என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், “எப்படி இருந்த திமுக, தற்போது இப்படி ஆகிவிட்டது. திமுக ஒரு குழப்பவாதி கட்சி, ஸ்டாலின் ஒரு குழப்பவாதி” என விமர்சித்துள்ளார்.

மேலும் ”முக ஸ்டாலினின் குழப்பத்துக்கு அவரது முதல்வர் கனவே காரணம், நித்தியானந்தா போல் தனி தீவு வாங்கி வேண்டுமானால் அவர் முதல்வர் ஆகலாம், ஆனால் தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுகவின் ஆட்சி தான்” எனவும் அவர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments