Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு கடித்து பலியான இரண்டு பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் : ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (19:58 IST)
சமீபத்தில் பாம்பு கடித்து இறந்துபோன இருவரின் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
 
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடலூர் மாவட்டம், காரணப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகள் பாலஸ்ரீ காரணப்பட்டு அங்கன்வாடி அருகே பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
 
விழுப்புரம் மாவட்டம், ஆசனூர் கிராமத்தை சேர்ந்த தாண்டவமூர்த்தி என்பவரின் மகன் குணசேகரன் வயல்வெளியில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
 
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பாம்பு கடித்து உயிரிழந்த பாலஸ்ரீ மற்றும் குணசேகரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments