Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்: சொல்வது யார் தெரியுமா?

ஜெயலலிதா தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்: சொல்வது யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (15:39 IST)
பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டு மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என ஊருக்கு ஊர் பள்ளி கூடங்கள் திறந்து கல்வியை வளர்த்தார். ஆனால் ஜெயலலிதா தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களை குடிகாரர்கள் ஆக்கினார் என குஷ்பு தெரிவித்தார்.


 
 
தாராபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளாரும் நடிகையுமான குஷ்பு அதிமுக அரசையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தார்.
 
அதிமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக எந்த நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மக்களுக்காகவே நான் என்று சொல்லும் ஜெயலலிதா சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை. இங்கு மக்கள் ஆட்சி நடைபெறவில்லை ஸ்டிக்கர் ஆட்சிதான் நடைபெறுகிறது என்றார்.
 
மேலும் ஜெயலலிதா தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்து மக்களை குடிகாரர்கள் ஆக்கினார் என கூறிய குஷ்பு, டாஸ்மாக்கை ஒழித்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என ஆளும் கட்சி அமைச்சர் கூறுகிறார். ஆனால் நான் சொல்கிறேன் இந்த டாஸ்மாக்கினால் தான் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments