Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு தயாராகும் அதிமுக : அமைச்சர்களுடம் ஜெயலலிதா ஆலோசனை

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (17:47 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சர்களுடன் போயஸ்தோட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். 
 
முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்ல உள்ள நிலையில் இன்று அமைச்சர்களுடன் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்தும் இதற்காக நிலுவையில் உள்ள அரசு நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது, சட்டசபையில் விதி எண் 110 கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடுவது, அத் திட்டங்களை விரைவாக தொடங்குவது பற்றியும் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கியுள்ளார். 
 
மேலும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments