Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்டு கார்டா போடுறீங்க! எங்களுக்கு எண்டே கிடையாது! – மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி!

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (11:22 IST)
சட்டப்பேரவையிலும் திமுகவே வெல்லும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

கடந்த ஆண்டு தொடங்கிய மக்களவை தேர்தல் முதலே அதிமுக – திமுக போட்டு சூடுபிடித்துள்ளது. மக்களவையில் பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடிந்தது. தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என திமுக தனது பலத்தை காட்டி வருகிறது. இதில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – திமுக இடையே சமமான மோதல் இருந்தது.

திமுகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”உள்ளாட்சி தேர்தல் படத்தின் இடைவேளை போன்றதுதான். சட்டமன்ற தேர்தல்தான் க்ளைமேக்ஸ்” என கூறியிருந்தார். வழக்கமாக ஸ்டாலின் எது பேசினாலும் உடனடியாக பதிலடி தருபவர் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார். மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள அவர் ”அதிமுகவை பொறுத்த வரை என்றுமே ஹீரோதான். சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments