Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்: நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2015 (12:19 IST)
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
இது குறித்து நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாப்படுகின்ற ஒரு வீர விளையாட்டு ஆகும்.
 
இந்த விளையாட்டு அறுவடை மற்றும் பண்டிகை காலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விளையாட்டில் பங்குபெறும் காளைகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படுத்தப்படுவதில்லை. 
 
அவற்றிற்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக அரசும் உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதோடு இந்த வீர விளையாட்டுகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்கள் அதிக அளவு பணம் செலவு செய்து அதை பராமரிப்பதோடு, முறையான பயிற்சியும் கொடுத்து வருகிறார்கள்.
 
நீண்ட நெடுங்காலமாக வரலாற்று பின்னணியோடு, தமிழரின் கலாசாரம் பண்பாட்டோடு கலந்த இந்த வீர விளையாட்டை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments