Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளை மோசமாக நடத்தும் கோவை சிறை அதிகாரிகள்; வாட்ஸ் அப் வீடியாவால் அம்பலம்

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2015 (15:52 IST)
கோவை சிறையில் கைதிகளை மோசமாக நடத்தும் வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை கைதி ஒருவர் தெரியாமல், செல்போனில் பதிவு செய்ததாகத் தெரிகிறது. அதில் தனிமை சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதும், அந்த சிறைகளிலேயே உணவு உண்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
 

 
மேலும், தரையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் தூங்க முடியாமல் கைதிகள் சிரமப்படுவது போலும் வெளியாகி உள்ளது. அதை விட முக்கியமாக, சிறை வளாகத்தில் கைதிகளை தனிமை சிறைகளில் உள்ளாடைகளுடன் அடைக்கப்பட்டுள்ள போன்ற காட்சிகளும் வெளியாகிவுள்ளது.
 
இது போன்ற தனிமை சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளை பார்க்க உறவினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சிறை நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால், கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் அதிகம் நடப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments