Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் ஆபத்தானதுதான்.. அதையும் தடை செய்யுங்கள் - ஜக்கி வாசுதேவ் காட்டம்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (16:51 IST)
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என தமிழகம் எங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஐ.டி. ஊழியர்கள் என பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்போது தமிழகமெங்கும் தீவிரமடைந்துள்ளது. ஆண்கள் மட்டுமே போராடி வந்த இந்த போராட்டங்களில் தற்போது ஏராளமான இளம் பெண்களும் கலந்து கொண்டு போராடி வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுபற்றி  கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ் “கிரிக்கெட் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு விளையாடுதான். அந்த விளையாட்டில் பந்து பட்டு பலர் உயிர் இழந்தனர். அப்படிப் பார்த்தால் கிரிக்கெட்டையும் தடை செய்ய முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில், ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று, நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

செல்லப்பிராணிகளுக்கு ரயிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு.. ஆனால் இது கட்டாயம்..!

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments