Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போது கமல் அரசியலுக்கு வந்தால் வெற்றிதான் - பிரபல ஜோதிடர் கணிப்பு

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (11:47 IST)
தற்போது நடிகர் கமல்ஹாசனின் ஜாதகத்தில் செவ்வாய் திசை நிலவுவதால், தற்போது அவர் அரசியலுக்கு வந்தால் மாபெரும் வெற்றி பெறுவார் என பிரபல ஜோதிடர் ஒரு கணித்துள்ளார்.


 

 
தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து நற்பணி மன்றங்களாக மாற்றியதோடு, அதன் மூலம் பல நல்ல காரியங்களை சத்தமின்றி செய்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். மேலும், சமீப காலமாக தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த  வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
மேலும், சசிகலா தமையிலான ஆட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். தற்போதுள்ள ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தி, மக்களுக்கு விருப்பமான ஒருவர் முதல்வராக அமர வேண்டும் என பகீரங்கமாக பேட்டியளித்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் கமலுக்கு எதிராக கருத்து கூறினர். 
 
எனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதில் தனக்கு ஆர்வம் இல்லை என கமல்ஹாசன் மறுத்துவிட்டார்.
 
இந்நிலையில், பிரபல வார இதழ் விகடனுக்கு பேட்டியளித்த ஜோதிடர் சூரிய நாராயணமூர்த்தி “ கமல்ஹாசன் உத்திரட்டாதி மீன ராசி.மீன லக்னம். வருகிற நவம்பர் மாதத்திற்கு பின் அவருக்கு செவ்வாய் திசை தொடங்குகிறது. இவரது ஜாதகத்தில் செவ்வாய் மகரத்தில் உச்சத்தில் இருக்கிறார். பொதுவாக செவ்வாய், ஏழை மக்கள், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஆவேசத்துடன் போராடும் குணம் படைத்தவர் ஆவார். எனவே, கமல்ஹாசன், இந்த நேரத்தில் ஏதேனும் அமைப்பு, இயக்கம் அல்லது கட்சி தொடங்கினால் அவர் பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெறுவார்” என அவர் கூறினார்.
 
கடவுள், ஆன்மீகம், ஜாதகம் ஆகியவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர் கமல்ஹாசன். எனவே, இந்த ஜோசியரின் கணிப்பிற்கு அவர் என்ன சொல்லப் போகிறாரே தெரியவில்லை...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments