Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு மொழிப்போர் துவங்கும்:திராவிடர் கழகம் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (13:41 IST)
இந்திய தெற்கு ரயில்வே துறை, ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்கவேண்டும் என அறிவித்திருந்த நிலையில், திராவிட கழகச் செயலாளர் கீ.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தகவல் பரிமாற்றம் புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் கட்டுபாட்டு அறைகளிடயே நடக்கும் தகவல் பறிமாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருக்கவேண்டும் என்றும், தமிழில் பேசக்கூடாது என்றும் தெற்கு ரயில்வே துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை கண்டித்து,தமிழகத்தில் பல முக்கிய நபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி, இந்த அறிவிப்பு மீண்டும் ஒரு மொழிப்போரைத் துவக்கும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மொழியை உதாசீனப் படுத்தினால் பல்வேறு தரப்பினரையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் இது குறித்து, ரயில்வே துறை தனது சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ரயில்வே துறையின் சுற்றறிக்கை குறித்து கவிஞர் வைரமுத்து, மொழியை களவாடப் பார்த்தவர்கள் தற்போது தமிழின் கழுத்தை முறிக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து, தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் அறிவிப்பு என தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியா காலங்களில் திராவிட இயக்கங்கள் அன்றைய மத்திய அரசுக்கு எதிராக ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர்.


தற்போது தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால்,மீண்டும் ஒரு போராட்டம் எழும் என தமிழ் மொழி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments