திவாகரன் வீட்டில் 4 மணி நேரமாக சோதனை நடத்தும் அதிகாரிகள்...

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (10:40 IST)
சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டில் 4 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு மற்றும் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மது ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
அதேபோல், சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கலைக் கல்லூரியிலும் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து, திவாகரனின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டிற்கு முன்பு திரண்டுள்ளனர்.
 
10 குழுமங்களுக்கு சொந்தமான போலி நிறுவனங்களை குறி வைத்து இந்த சோதனை செய்யப்படுவதாகவும், அதில் 3 குழுமங்கள் சசிகலாவிற்கு சொந்தமானவை எனவும் அதிகாரிகள் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல், கருப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க!.. தவெக இனிமே வேறலெவல்!.. செங்கோட்டையன் மாஸ்!...

காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments