Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே திட்டமிட்டு வாக்குவாதம் செய்த சோபியா: ஆதாரம் காட்டும் தமிழிசை

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (08:48 IST)
சென்னையில் இருந்து தூத்துகுடி சென்ற விமானத்தில் தமிழிசை செளந்திரராஜனுடன் வாக்குவாதம் செய்த சோபியா, தற்செயலாக வாக்குவாதம் செய்யவில்லை என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு செய்துள்ளதாகவும் தமிழிசை செளந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே தான் அந்த விமானத்தில் பயணிப்பது தெரிந்தவுடன் இன்று தமிழிசை முன் பாஜகவை எதிர்த்து கோஷமிட போவதாக சோபியா டுவிட்டரில் பதிவு செய்திருந்ததாகவும், இதுவே அவர் முன்கூட்டி திட்டமிட்டதற்கு ஆதாரம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

சோபியாவின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வேதனையை தருவதாகவும் இது தவறான செயல் என்றும் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பதிவு செய்துள்ள டுவீட் கண்டனத்துக்கு உரியது என்றும் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்கள் முன் சோபியா பதிவு செய்த டுவிட்டையும் தமிழிசை செளந்திரராஜன் படித்து காண்பித்தார். இதுதான் தமிழிசை காண்பித்த டுவீட்:

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது.. ஆயுத விற்பனையும் செய்தார்களா?

தடையை மீறி யாத்திரை: மதுரையில் நடிகை குஷ்பு கைது

ஸ்பீட் ப்ரேக்கரில் மோதி திரும்ப வந்த உயிர்..! மகாராஷ்டிராவில் ஆச்சர்ய சம்பவம்!

காலை முதல் அமலாக்கத்துறை சோதனை: முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

கணவன் கழுத்தில் கயிறு கட்டி தெருவில் இழுத்து சென்ற மனைவி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments