Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதாவுக்காக போராடுபவர்கள் ஐஎஸ் ஆதரவாளர்கள்: கிருஷ்ணசாமி சர்ச்சை கருத்து!

அனிதாவுக்காக போராடுபவர்கள் ஐஎஸ் ஆதரவாளர்கள்: கிருஷ்ணசாமி சர்ச்சை கருத்து!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (14:57 IST)
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாணவி அனிதாவின் மரணம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்கள் கூறிவந்த நிலையில் தற்போது அனிதாவுக்காக போராடுபவர்கள் குறித்தும் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.


 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அவரது தற்கொலைக்கு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறிய கிருஷ்ணசாமி டெல்லியில் அளித்த பேட்டியில் மேலும் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
 
அந்த பேட்டியில் அரியலூர் மாணவி அனிதா மூளை சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சிபிஐ அல்லது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
தர்மபுரி இளவரசன், டிஎஸ்பி விஷ்ணுபிரியா ஆகியோரது மரணத்தில் சந்தேகம் உள்ளது போல அனிதாவின் தற்கொலையிலும் சந்தேகம் உள்ளது. இந்த காலத்துக்கு தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல.
 
தமிழகத்தில் தேச விரோதிகள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் தான் போராடுகின்றனர். தமிழ்நாட்டை துண்டாட நினைக்கும் இந்திய தேசத்துக்கு எதிரான தமிழ்த் தேசிய குழுக்கள் தங்கள் போக்கில் போராட்டத்தை கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் என கிருஷ்ணசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments