Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக கூட்டணியில் பாமக? தினகரன் விளக்கம்

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (07:30 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி என இரண்டு கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் அமமுக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வட மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள பாமக இந்த மூன்று கூட்டணிகளில் எந்த கூட்டணியில் இணையும் என்பதே தற்போது அரசியல் விமர்சகர்கள் பலருடைய கேள்வியாக உள்ளது. திமுக கூட்டணியில் பாமக இல்லை என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் இணைய பாமக தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அன்புமணி கூட வெற்றி பெற முடியாது என்ற நிலை இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறி வருவதால், அமமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக கூட்டணியில் பாமக இணையுமா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தினகரன், 'நாங்கள் ஐந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்துக்கு வரும்போது இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம்' என்று கூறினார். அமமுக கூட்டணியில் பாமக இல்லை என்று தினகரன் குறிப்பிடாததால் அமமுக-பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments