Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா நிரந்தரம் அல்ல: காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆப்பு!

சசிகலா நிரந்தரம் அல்ல: காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆப்பு!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (15:08 IST)
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவர் நிரந்தர பொதுச்செயலாளர் அல்ல தற்காலிகமாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் சில சிக்கல்கள் அவருக்கும் கட்சிக்கும் வர உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


 
 
அதிமுக கட்சி விதிப்படி அந்த கட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் தான் பொதுச்செயலாளர் ஆக முடியும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்து 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை.
 
இதனால் அவர் பொதுச்செயலாளர் ஆவதில் சட்ட சிக்கல் இருந்தது. இதனை வைத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
 
பொதுக்குழு கூடி தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் வாக்களித்து தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் அவர் நிரந்தர பொதுச்செயலாளர். அவருக்கு தான் கட்சியில் சர்வ அதிகாரமும் உண்டு.
 
ஆனால் அப்படி சசிகலாவை தேர்ந்தெடுப்பதில் சட்டசிக்கல் இருப்பதால் அதிமுக முன்னணி தலைவர்கள் பொதுக்குழுவை கூட்டி தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவித்தார்கள். இதன் மூலம் இவர் நிரந்தர பொதுச்செயலாளர் இல்லை என்பது தெளிவாகிறது.
 
இந்நிலையில் இதனை வைத்து சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரை மத்திய அரசு கையிலெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் உள்ள சட்ட சிக்கலை வைத்து தேர்தல் நடத்தி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments