Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசி.க்கு ஆதரவு தெரிவிக்க காங். எம்எல்ஏக்களுக்கு நிர்பந்தம்: திருநாவுக்கரசர் மீது ப.சிதம்பரம் புகார்!

சசி.க்கு ஆதரவு தெரிவிக்க காங். எம்எல்ஏக்களுக்கு நிர்பந்தம்: திருநாவுக்கரசர் மீது ப.சிதம்பரம் புகார்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (16:53 IST)
தமிழக அரசியல் களம் உக்கிரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழகத்தில் அசாதரணமான சூழலை உருவாக்கியுள்ளது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.


 
 
இதனால் சசிகலா முதல்வர் ஆவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஓபிஎஸுக்கு ஆதரவு பெருகுவதால் எம்எல்ஏ ஓபிஎஸ் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை சொகுசு விடுதியில் சசிகலா சிறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனாலும் ஓபிஎஸுக்கு தற்போது வரை 5 எம்எல்ஏக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது கணிசமான எம்எல்ஏ ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
 
இதனை சமாளிக்க காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை சசிகலா திருநாவுக்கரசரிடம் கேட்டிருப்பதாக கூறப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை அந்த கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் வற்புறுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் ராகுல் காந்தியிடம் புகார் ஆளித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments